திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 3 மே 2023 (07:52 IST)

சர்ச்சைக்குரிய ட்வீட்.. இந்தியர்களின் எதிர்ப்பால் மன்னிப்பு கேட்ட உக்ரைன் அரசு..

உக்ரைன் அரசின் ட்விட்டர் பக்கத்தில் இந்து கடவுள் காளி குறித்து சர்ச்சைக்குரிய ட்வீட் பதிவு செய்யப்பட்டிருந்ததை அடுத்து இந்தியர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக உக்ரைன் அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.

இந்து கடவுள் காளியை தவறாக சித்தரிக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை உக்ரைன் அரசின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டதை அடுத்து உக்ரைன் நாட்டை கடுமையாக இந்தியர்கள் விமர்சனம் செய்தனர்.

இதனை அடுத்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் சர்ச்சைக்குரிய ட்விட்டை நீக்கியதோடு இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறியிருந்தது. சர்ச்சைக்குரிய பதிவுக்கு நாங்கள் வருந்துகிறோம் என்றும் இந்தியாவின் தனித்துவமான கலாச்சாரத்தை உக்ரைன் அரசு மதிக்கிறது என்றும் இரு தரப்பு உறவு மற்றும் நட்புறவை மேலும் அதிகப்படுத்த தீர்மானித்துள்ளோம் என்றும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

Edited by Siva