1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (12:29 IST)

டுவிட்டரில் இருந்து திடீரென விலகிய சிவகார்த்திகேயன்.. என்ன ஆச்சு?

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் திடீரென ட்விட்டரில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன், அயலான் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்து உள்ளார் என்பதும் மாவீரன் ஆகஸ்ட் 11ஆம் தேதியும் அயலான் தீபாவளி தினத்தன்று வெளியாக உள்ளது. மேலும் அவர் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ட்விட்டரில் சுமார் 8 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ள சிவகார்த்திகேயன் திடீரென ட்விட்டரில் இருந்து பிரேக் எடுக்க போவதாகவும் சில காலம் கழித்து மீண்டும் வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய குழுவினர் தான் நடிக்கும் படங்கள் குறித்த தகவல்களை தெரிவிப்பார்கள் என்று கூறியுள்ளார். அவரது இந்த திடீர் முடிவு ஏன் என்பது தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
 
Edited by Siva