செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 மார்ச் 2022 (20:05 IST)

ரஷ்யாவை கடவுள் பார்த்து கொள்வார்: உக்ரைன் அதிபர் புலம்பல்!

ரஷ்யாவை கடவுள் பார்த்துக் கொள்வார் என உக்ரைன் அதிபர் புலம்பியதாக தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 
 
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு வாரமாக போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் எங்கள் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் கொடூரத் தாக்குதலை கடவுள் பார்த்துக்கொள்வார் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்
 
கடவுள் தண்டனை கொடுக்கும் போது ரஷ்யாவால் எங்கும் ஓடி ஒளிய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
உக்ரைனில் உள்ள தேவாலயங்களில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் சேதமடைந்த நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.