டிவிட்டர் சி.இ.ஓ வின் டிவிட்டர் கணக்கு ஹேக் ஆனது எப்படி??
டிவிட்டரின் சி.இ.ஓ. ஜாக் டோர்சேவின் டிவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது எப்படி என தெரிய வந்துள்ளது.
டிவிட்டர் செயலி உலகம் முழுவதும் உள்ள பலராலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் டிவிட்டரின் சி.இ.ஓ ஜாக் டோர்சேவின் டிவிட்டர் கணக்கு, மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. அவ்வாறு ஹேக் செய்யப்பபட்ட அவரது கணக்கில் இருந்து சர்ச்சைக்குரிய கருத்துகள் பகிரப்பட்டன.
இது குறித்து டிவிட்டர் நிறுவனம் கூறுகையில், ஜானின் டிவிட்டர் கணக்குடன் இணைக்கப்பட்ட ஜானின் செல்ஃபோனே ஹேக் செய்யப்பட்டதற்கான காரணம் என கூறியுள்ளது. அதாவது கிளவுட் ஹோப்பர் வழியாக அவரது கணக்கில் மர்ம நபர்கள் ஊடுறுவியுள்ளனர் என கூறப்படுகிறது. முதலில் ஜாக் டோர்சேவின் செல்ஃபோன் எண்ணை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, பின் எஸ்.எம்.எஸ் மூலம் டிவிட் பதிவாகும்படி செய்துள்ளதாக கூறப்படுகிறது. மர்ம நபர்களால் பகிரப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் பின்னர் தானாகவே அழிந்தது.
ஜானின் டிவிட்டர் கணக்கு தற்போது பாதுகாப்பாக உள்ளது என டிவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது. டிவிட்டரின் சி.இ.ஓ. வின் டிவிட்டர் கணக்கே ஹேக் செய்யப்பட்டிருப்பது டிவிட்டர் பயனாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.