வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (18:04 IST)

டிக்டாக்கை வாங்க முயற்சி செய்யும் டிவிட்டர் ! – மைக்ரோசாப்ட்டுக்கு போட்டி!

டிக்டாக்கை வாங்கும் முயறிச்யில் டிவிட்டர் நிறுவனம் முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டிக்டாக் உள்ளிட்ட பல சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்தது. இதையடுத்து சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க அரசும் அதே முடிவை எடுக்கும் விதமாக செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு டிக் டாக் செயலியை விற்பனை செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் டிக் டாக் செயலி அமெரிக்காவில் தடை செய்யப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இந்நிலையில் இப்போது அமெரிக்க செயலியான டிவிட்டர் நிறுவனம் டிக்டாக்கை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் முன்னிலையில் மைக்ரோ சாப்ட் நிறுவனமே உள்ளதாக சொல்லப்படுகிறது.