சீனப்பெருஞ்சுவர் எங்கே இருக்கிறது? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் உதவிகேட்ட பெண்
கேம் ஷோ ஒன்றில் சீனப்பெருஞ்சுவர் எங்கே இருக்கிறது? என்ற கேள்விக்கு துருக்கி நாட்டைச் சேர்ந்த பெண் பதில் தெரியாமல் மற்றவர்களின் உதவியை நாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சி போல் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவது அந்நாட்டு தொலைக்காட்சிகளில் நடைபெற்று வருகிறது.
துருக்கி நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி சேனல் ஒன்று இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பொருளாதார பட்டதாரி பெண் ஒருவர் கலந்துக்கொண்டார்.
இவரிடம் சினப்பெருஞ்சுவர் எங்கே இருக்கிறது என்ற கேட்கப்பட்டுள்ளது. இதற்கு இவர் பதில் தெரியாமல் மற்றவர்களிடம் உதவி கேட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.