வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (14:47 IST)

இந்தியாவுக்கு வர்த்தகச் சலுகைக் கொடுக்கக் கூடாது – ட்ரம்ப் ஆவேசம் !

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு உலக வர்த்தக மையத்தில் இருந்து கிடைக்கும் வர்த்தகச் சலுகைகள் இனிக் கிடைக்கக் கூடாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின் பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்தியா, சீனா, ஈரான் உள்ளிட்ட உலக நாடுகளுடன் தொடர்ந்து வர்த்தகப் போரில் ஈடுபட்டு வருகிறார். இந்த நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரியினை விதித்து வருகிறார். மேலும் அமெரிக்க நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்கே அதிகமாக வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் கூறி வருகிறார்.

இந்நிலையில் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் ’இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் வளரும் நாடுகள் என்ற நிலையில் இல்லை. அவை வளர்ந்த நாடுகளாகி விட்டன. இந்நாடுகளுக்கு உலக வர்த்தக அமைப்பிடமிருந்து கிடைக்கும் வர்த்தகச் சலுகைகள் கிடைக்கக் கூடாது. இனி அச்சலுகைகள் கிடைக்க நான் விடமாட்டேன்’ என ஆவேசமாகப் பேசியுள்ளார். இந்த வர்த்தகச் சலுகைகளால் அமெரிக்காவுக்குப் பின்னடைவு ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.