திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 3 ஜனவரி 2018 (14:32 IST)

வடகொரிய அதிபருக்கு பதிலடி கொடுத்த டிரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் யூ  அமெரிக்காவை அழிப்பதற்கான அணு ஆயுத பட்டன் எப்போதும் என் மேஜையில் இருக்கிறது என்று கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியாவைவிட அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுத பட்டன் அமெரிக்காவிடம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
வட கொரியா உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோத்னைகளை அவ்வப்போது நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்க அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்க பல பொருளாதார தடைகளை விதித்தது. இதனையடுத்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் யூ புத்தாண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கான அணு ஆயுத பட்டன் எப்போதும் என் மேஜை மீது உள்ளது. அதிக ஏவுகனை சோதனைகளை செய்து போர் தொடுக்க வல்லமையான அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளோம். அமெரிக்கா எங்கள் மீது ஒரு போதும் போர் தொடுக்க இயலாது என்று கூறினார்.
 
வடகொரிய அதிபர் கிம் ஜாங் யூ வின் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வட கொரிய அதிபரான கிம் ஜாங் யூ எல்லா நேரங்களிலும் அணு அயுத பட்டன் தனது மேசை மீது தான் உள்ளது என்று கூறியுள்ளார். வடகொரியாவில் குறைபாடுகளுடன் பட்டினி கிடக்கும் யாராவது கிம் ஜாங் யூ விடம் கூறுங்கள், வடகொரியாவைவிட அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுத பட்டன் அமெரிக்காவிடம் இருக்கிறது. அது வடகொரியா வைத்திருக்கும் பட்டனை விட மிகப்பெரியது என்று டிரம்ப் பதிலளித்துள்ளார்.