ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 1 மார்ச் 2017 (15:08 IST)

இந்தியர்களுக்கு அதிபர் டிரம்ப் சலுகை!!

தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் முஸ்லிம்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தினார்.


 
 
இந்நிலையில் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவோருக்கு சாதகமான விசா நடைமுறையை அமல்படுத்த அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். 
 
கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தகுதி அடிப்படையிலான குடியேற்ற அமைப்பு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. 
 
அதேபோல், தற்போது இருக்கும் குடியேற்ற முறையினை தவிர்த்து புதிய தகுதி அடிப்படையிலான குடியேற்ற முறை அமெரிக்காவுக்கு கொண்டுவரயுள்ளேன் என தெரிவித்தார்.
 
இதனால் தகுதி அடிப்படையிலான குடியேற்ற அமைப்பு முறை இந்தியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும். இதன் மூலம் இந்தியர்கள் அமெரிக்கா வருவது எளிமையாக இருக்கும் என தெரிகிறது.