1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 10 ஜூலை 2018 (15:09 IST)

சம்பளம் தராத டிரம்ப்: நீதிமன்றத்தை நாடிய டிரைவர்

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஓவர் டைம் பணிக்கு சம்பளம் தரவில்லை என அவரது டிரைவர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.
 
டிரம்பின் கார் டிரைவராக கடந்த 25 ஆண்டுகளாக பணிபுரிவர் நோயல் சின்ட்ரன். இவர் டிரம்பின் குடும்பத்தினருக்கும், அவரது வர்த்தக நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் அவர் டிரம்ப் நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தான் 6 ஆண்டுகளாக டிரம்ப் மற்றும் அவரது நிறுவனத்துக்கு 3,300 மணி நேரம் ஓவர் டைமாக வேலை பார்த்ததாகவும், அதற்கான சம்பளத்தை டிரம்ப் தரவில்லை என்றும் கூறியுள்ளார்.
 
மேலும், தான் பணி செய்ததற்கு மணிக்கு ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 20 லட்சம் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு டிரம்பின் நிறுவனம் சின்டரனுக்கு உரிய சம்பளம் வழங்கப்பட்டது, அவர் தொடுத்த வழக்கில் உண்மை தண்மை இல்லை என மறுத்துள்ளது.