திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (15:49 IST)

தேசிய கொடிக்கு தவறான கலர் அடித்த டிரம்ப்: வாட்டி எடுக்கும் இணைய வாசிகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டு தேசிய கொடிக்கு தவறாக வண்ணம் தீட்டியது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. டிரம்பின் இந்த செயலால் அவரை விமர்சித்து பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 
 
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் நகரில் குழந்தைகள் மருத்துவமனைக்கு அந்நாட்டு அதிபர் டிரம்ப்பும், அவரது மனைவி மெலானிய டிரம்ப்பும் சென்றிருந்தனர்.
 
அப்போது குழந்தைகளுடன் சேர்த்து ஓவியங்கள் வரைவதில் ஈடுபட்டார்  டிரம்ப். அப்போது அவர் அமெரிக்க தேசிய கொடியை வரைந்த போது, அதற்கு தவறாக வண்ணமிட்டார். 
 
இது தற்போது விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. டிரம்ப்புக்கு அமெரிக்க தேசிய கொடி எப்படி இருக்கும் என்று கூட தெரியவில்லை ஆனால் இவர் அமெரிக்காவின் அதிபர் என்பது போன்று விமர்சித்து வருகின்றனர்.