1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஜூலை 2018 (21:23 IST)

22 ஆண்டுகளாக அமேசான் காடுகளில் உலாவும் தனி ஒருவன்!

அமேசான் காடுகளில் கடந்த 22 ஆண்டுகளாக தனி ஆளாக ஒரு பழங்குடி இன ஆண் வாழ்ந்து வருகிறார். இது தொடர்பான வீடியோ ஒன்றை பிரேசில் அரசாங்கத்தின் ஃபுனாய் குழு வெளியிட்டுள்ளது. 
 
குறிப்பிட்ட இனக்குழுவில் உள்ள அனைவரும் கொல்லப்பட்ட பின்னர் அவர் மட்டும் தப்பி பிழைத்து அமேசான் காடுகளில் தனியாக வாழ்ந்து வருகிறார்.
 
ஃபுனாய் வெளியிட்டுள்ள வீடியோவில் அந்த நபர் மரங்களை கோடரி கொண்டு வெட்டும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன இருக்கின்றன. ஏறத்தாழ 4000 ஹெக்டேர் பரப்பளவுக்கு அவர் வசிக்கும் பகுதி பரவி இருக்கிறது. 
 
அந்த இடத்தை சுற்றி தனியார் பண்ணைகளும், அழிக்கப்பட்ட காட்டு பகுதிகளும் இருக்கின்றன. ஆனால், அவர் வசிக்கும் பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. 
 
யாரும் காட்டிற்குள் சென்று அந்த மனிதருக்கு தொல்லை தரக்கூடாது என்பதற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஃபுனாய் அமைப்பு 1996 ஆம் ஆண்டிலிருந்து அந்த தனி மனிதனை பின் தொடர்ந்து இந்த காணொளியை உருவாக்கி இருக்கிறது.