செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 26 அக்டோபர் 2018 (18:36 IST)

மியான்மரில் கைதான மூன்று பத்திரிக்கையாளர்களுக்கு ஜாமின்...

மியான்மரில் நடைபெற்ற ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வந்த ஆங் சாங் சூகி வீட்டுச்சிறை வைக்கப்பட்டார். இது குறித்து பல நாடுகள் அழுத்த கொடுத்த நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டார். 
பல வருடம்கள் சொந்த நாட்டிலே சிறைவைக்கப்பட்டிருந்த போது ஆங்சாங் சூகிக்கு கடிதம்,தொலைபேசி உட்பட எதுவும் அனுமதிக்கப்ப்டவில்லை,எல்லாம் ஆளும்  அதிகாரத்தினால் தடை செய்யப்பட்டது.
 
இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட சூகி அதில் வெற்றி  பெற்ற் மியான்மர் நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
 
இவர் பிரதமராக பதவியேற்றது முதல் அந்நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்தன.
இதனியடுத்து அரசு ரகசியங்களை வெளியிட்டதற்காக ராய்டர்ஸ் பத்திரிக்கையில் பணியாறி வந்த மூவருக்கு 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.
 
மியான்மர் நாட்டின் வரவு செலவு கணக்குகளை வெளியிட்டதற்காக லெவன் மீடியா பத்திரிக்கையின் தலைமை நிருபர் ஆசிரியர்கள் இரண்டு பேர் என மொத்த மூன்று பேர் சட்டத்தைற்கு விரோதமாக மக்களை தூண்டுவதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
இது பத்திரிகை சுதந்தரத்தின் கழுத்தை நெறிக்கும் செயல் என உலகெங்கிலும் இருந்து மியான்மர் அரசுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தன.
 
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பத்திரிக்கையாளர்களுக்கும் ஜாமீன் வழங்கி அந்த நாட்டு நீதிமன்றன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
 
இவ்வளவு பிரச்சனைகளும் ஆங்சாங் சூகியின் ஆட்சியின் தான் நடைபெறுகிறது என்று அன்னைவருக்கும் தெரிந்தும் கூட அவர் இதுவரை எதுவும் பேசவில்லை.
 
ஆங் சாங் சூகிக்கு 1991 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.