செவ்வாய், 12 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2019 (10:07 IST)

4 மாதங்களில் 1000 பேர் பலி – முடிவில்லா சிரியா யுத்தம்

முடிவில்லாமல் நடந்து கொண்டிருக்கும் சிரியா உள்நாட்டு போரில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 1000 பேர் இறந்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

கடந்த எட்டு ஆண்டுகளாக சிரியா அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்குமிடையே முடிவில்லாமல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பலர் இறந்துள்ளனர். சிரியா அரசு படைகளுக்கு ரஷ்யா அரசு உதவி வருகிறது. அதேசமயம் சிரியா, கிளர்ச்சியாளர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்த பல வழிகளில் முயற்சித்து வந்தது.

அடிக்கடி கிளர்ச்சியாளர்கள் பதுங்கியிருக்கும் பகுதிகளாக கருதப்பட்ட இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான சிரியா நாட்டு மக்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். பலர் படகில் வெளிநாடுகளுக்கு தப்ப முயன்று கடலில் மூழ்கிய கொடூரமும் நடந்தது.

தற்போது உள்நாட்டு போர் தனது இறுதி கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சிரியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த சில மாதங்களில் கிளர்ச்சியாளர்கள் பதுங்குதளங்கள் மீது சிரியா அரசு நடத்திய தாக்குதலில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்திருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.