ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (23:05 IST)

ரஷிய படைக்கும் ஐஎஸ்ஐஎஸ்க்கும் பயங்கரவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை - உக்ரைன் அதிபர்

Volodymyr Zelenskyy
ரஷிய படைக்கும் ஐஎஸ்ஐஎஸ்க்கும் பயங்கரவாதிகளுக்கும்  எந்த வித்தியாசமும் இல்லை என உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ராணுவத்தினர் உக்ரைன் மீது போர் தொடுத்து வருகின்றனர். 40 நாட்களுக்கும் மேலாக இரு நாட்டு வீரர்களும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இ ந் நிலையில் ரஷ்ய ராணுவத்தினரும் ஐஎன் .எஸ் தீவிரவாதிகளுக்கும் வித்தியாசமில்லை என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் இன்று காணொலியில் அவர் உரையாற்றியதாவது:        ரஷ்ய ராணுவம் உக்ரைனுக்கு உதவுபவர்களை தேடிப் பிடித்துக் கொன்றது. உக்ரேன்னியர்களின் கைகால்களை வெட்டினர் ரஷ்ய ராணுவத்தினர். பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

உக்ரைனில் நடக்கும் போர்க்குற்றத்திற்காக ரஸ்ய ராணுவனும் அவர்களுக்கு உத்தரவிடுபவர்க்ளையும்  நீதியின் முன் நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.