1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 31 ஜூலை 2023 (17:24 IST)

பல லட்சம் பணம் செலவு செய்து நாயாக மாறிய இளைஞர்!

dogo
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இளைஞர் பல லட்சம் பணம் செலவு செய்து நாயாக மாறியுள்ளார்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இளைஞர் டோகோ. இவர் சிறு வயது முதலே நாய்களின் மீது பாசம் கொண்டிருப்பவர். இவர், தன் நண்பர்களிடம் கூட தான் நாயாகப் பிறந்திருக்கலாம் என்று கூறி வந்துள்ளார்.

இதற்குக் காரணம் நாய்களின்  நன்றி மறவா குணமும், அதன் காப்பாற்றும் குணமும் ஆகும்.இதுவே  உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலானோர் வீடுகளிலும் நாய்கள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இளைஞர் டோகோவை அவரது விருப்பப்படி நாயாக மாற்றியுள்ளது ஜப்பான்  நாட்டைச் சேர்ந்த சினிமாவுக்கான ஆடைகளை உருவாக்கும் ஜெப்பெட் நிறுவனம். இதைச் செய்ய 40 நாட்கள் ஆனதென்றும், இதற்காக டோகோ 12 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளதாக கூறியுள்ளது.

மேலும், ‘சக மனிதர்கள் கொடுக்கும் போலி மரியாதைக்காக மனிதனாக இருக்க விருப்பமின்றி நாயாக மாறியதாகவும் தன் வாழ் நாள் கனவு நிறைவேறியதாக’ டோகோ தெரிவித்துள்ளார்.