திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 8 ஜனவரி 2024 (16:20 IST)

ரூ.5 லட்சம் பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த டாக்சி ஓட்டுநர்

taxi driver saranjithsingh
ஆஸ்திரேலியாவில் டாக்சி டிரைவர் ஒருவர்  தன் காரில்  பயணித்தவர்கள் விட்டுச் சென்ற ரூ.5 லட்சம் பணத்தை அவர்களிடமே பத்திரமாக ஒப்படைத்துள்ளார்.

உலகில் பல கோடி மனிதர்கள் இருக்கிறார்கள் ஒவ்வொருவருக்கும் என தனி குணம் உண்டு. சிலர் தங்களிடம் இருப்பதையும் மற்றவருக்கு  கொடுத்து உதவுகிறார்கள்.

ஒரு சிலர் தங்களிடம் எத்தனை இருந்தாலும் அடுத்தவர்களிடம் இருந்து பறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியா நாட்டில் மெல்போர்ன் நகரில் தன் காரில் பயணித்தவர்கள் விட்டுச் சென்ற சுமார் ரூ.5 லட்சம் பணத்தை அவர்களிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளார் டாக்சி ஓட்டுனர் சரண்ஜித் சிங்.

அதாவது, அவர்கள் காரில் இருந்து இறங்கி சென்ற பின், காரின்  இருக்கையில், பணம் இருப்பதை கவனித்த சரண், அதனை காவலர்களிடம் ஒப்படைத்துவிட்டு  முழு விவகரங்களையும் கூறியுள்ளார். இதையடுத்து, உரியவர்களிடம் அந்தப் பணம் ஒப்படைக்கப்பட்டது.

சரண்ஜித் சிங்கின் உரிய பண்பை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.