1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2019 (21:05 IST)

ஒரே அடி... குழந்தையை கடிக்க வந்த நாய் ! அடித்து விரட்டிய ’சூப்பர் பூனை’ ! வைரல் வீடியோ

பொதுவாக இந்த உலகில் பிறப்பெடுத்த எல்லா உயிர்களுக்குமே ஒரு வித சுபாவம் உண்டு. அந்த வகையில் பூனைகளும் பூனை வகைகளூம் பெரிய ஆச்சர்யமானவை. பூனை வகைகளைச் சேர்ந்ததுதான் சிங்கம்,புலிகள் ஆனால் அவற்றை வீட்டில் வளர்க்க முடியாது. ஆனால் பூனைகளை வீட்டில் செல்லப்  பிராணிகளாக வளர்த்து பிள்ளைகளைப் போல் பராமரித்து வருகின்றனர். இவற்றிற்கு அழகு மற்றும் பேசன் ஷோ கூட நடைபெறுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள காலிஃபோர்னியாவில் ஒரு குழந்தை  ஒரு காருக்கு அருகில் நின்று விளையாடிக் கொண்டிருந்தது.
 
அப்போது, காரின் பின்னால் ஒரு நாய் பதுங்கி குழந்தையை தாக்க ஓடி வந்து குழந்தை இழுத்தது. அப்போது அங்கு வந்த பூனை ஒன்று நாயை ஒரே அடியில் கிழே தள்ளி குழந்தையை காப்பாற்றியது. அதனால் அந்த பூனைக்கு சூப்பர் பூனை என பெயரிட்டு அழைக்கின்றனர்.