செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 12 ஜனவரி 2024 (20:40 IST)

அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கி தியேட்டரில் சிங்கிலாக படம் பார்த்த பெண்!

Malaysia
மலேசியா நாட்டில், ஒரு தியேட்டரில், அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கி தியேட்டரில் சிங்கிலாக படம் பார்த்த பெண் மீது விமர்சனம் குவிந்து வருகிறது.

மலேசியா நாட்டைச் சேர்ந்தவர் எரிக்கா பைதுரி. வசதியான பெண் என்று தெரிகிறது. சமீபத்தில் தன் டிக்டாக் என்ற தளடத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அதில், அவர் சென்றிருந்த அனைத்து டிக்கெட்டுகளளையும் விலை கொடுத்து வாங்கி, தனி ஆளாக படம் பார்ப்பது போன்று காட்சி இருந்தது.

படம் பார்த்துக் கொண்டே அவர் பாப்கார்ன் சாப்பிடுவதும், கண்ணாடி அணிந்திருப்பதும் போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

இந்த வீடியோவை வெளியிட்ட அவர் அதில்,  நாங்கள் உள்முக சிந்தனை கொண்டவர்கள், எனவே தியேட்டரில் அனைத்து  இருக்கைகளையும் வாங்கினோம் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், இதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.