திருமணம் முடிந்த சில நிமிடங்களில் சிறை; புதுமண ஜோடியின் பரிதாபம்
திருமணம் முடிந்த ஒரு சில நிமிடங்களில் மணமக்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஸ்காட்லாந்தில் இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. திருமண மேடையில் திடீரென மணமகள் திருமண மேடையிலேயே மணமகனின் தாயாரை அடித்ததாக கூறப்படுகிறது
இதனால் மணமகன் வீட்டார் பெண் வீட்டாரை அடித்ததால் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தபோது மணமக்கள் இருவரையும் போலீசார் கைது செய்து தனித்தனி சிறையில் அடைத்தனர்
திருமணமான ஒரு சில நிமிடங்களில் மணமக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது