1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 12 ஜூலை 2018 (16:37 IST)

சிறுவர்கள் சிக்கி தவித்த குகையை அருங்காட்சியமாக மாற்ற முடிவு

தாய்லாந்தில் சிறுவர்கள் சிக்கி தவித்த தாம் லுவாக் குகையை அருங்காட்சியமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிட சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் கடந்த மாதம் 23ஆம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர்.
 
17 நாட்களுக்கு பிறகு தீவிர போராட்டத்தால் தாய்லாந்து அரசின் மீட்பு படை அவர்களை பத்திரமாக மீட்டது. இந்த சம்பவம் தாய்லாந்து மட்டுமின்றி உலகம் முழுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
சில உலக நாடுகள் மற்றும் பிரபலங்கள் குகையில் சிக்கி தவித்த சிறுவர்களை மீட்க உதவி செய்ய முன்வந்தது குறிப்பிடத்தக்கது. உலக மக்கள் பார்வையை ஈர்த்த குகையை அருங்காட்சியமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
மீட்பு பணியின்போது பயன்படுத்தப்பட்ட நவீன கருவிகள், பிரத்யேக ஆடைகள் உள்ளிடவைகள் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.