திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 10 ஜூலை 2018 (13:07 IST)

குகையில் இறுதிக்கட்ட மீட்பு பணி: தீவிரம் காட்டும் மழை!

தாய்லாந்து குகையில் 15 நாட்களாக சிக்கி தவித்து வந்த 13 சிறுவர்கள் மற்றும் அவரது பயிற்சியாளரை மீட்கும் இறுதிக்கட்ட பணி தீவிரமடைந்துள்ளது. அதேபோல், பருவமழையும் தீவிரம் அடைந்துள்ளது. 
 
ஏற்கனவே, கடந்த இரண்டு நாட்களில் 8 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களை மீட்கும் பணியில் மழை காரணமாக தோய்வு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அந்த குகைக்கு சென்ற போது திடீர் மழை பெய்து வெள்ளம் நீர் குகைக்குள் புகுந்தது. 
 
நீரும், சேறும் குகையை சூழ்ந்ததால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. தற்போது மீண்டும் மழை அதிகரித்துள்ளதால் சூழல் சிக்கலாகியுள்ளதாக தெரிகிறது. 
இருப்பினும் மூன்றாவது நாளாக இன்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்டு வருவதற்காக இறுதிகட்ட மீட்பு பணி நடந்து வருகிறது.
 
இதுகுறித்து மீட்பு குழுவின் தலைவரான பின்வருமாரு கூறினார், முந்தைய அனுபவத்தின் அடிப்படையில் மீட்பு குழுவினர் வேகமாக செயல்பட்டு சிறுவர்களை மீட்டனர். அதே அனுபவத்துடன் தற்போது இறுதிகட்ட மீட்பு பணி நடந்து வருகிறது. 
 
எனினும் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சற்று சிரமம் இருக்கிறது. எனினும் திட்டமிட்டபடி மீதமுள்ள அனைவரையும் இன்று மீட்டு விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.