செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (14:47 IST)

பயங்கரவாதிகள் தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 11 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 11 மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
ஆப்கானிஸ்தானில் தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாம் நாள், வாக்குப்பதிவு நடைபெற்று பெற்றுக் கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் அதிரடியாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
 
இந்த திடீர் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இன்னும் பொறுப்பேற்கவில்லை.