ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: புதன், 17 அக்டோபர் 2018 (07:32 IST)

பம்பை சென்ற சென்னை பெண் மீது தாக்குதல்: பெரும் பரபரப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை அளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை பல பெண்கள் அமைப்புகளே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன

இந்த நிலையில் இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைதிறப்பதால் ஐயப்பனை தரிசனம் செய்ய பல பெண்கள் மாலையணிந்து விரதம் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் வழியில் உள்ள நிலக்கல்லில் போராட்டக்காரர்கள் நின்று கொண்டு பம்பை செல்லும் பெண்களை தடுத்து வருகின்றனர். பேருந்து மற்றும் கார்களில் பெண்கள் இருந்தால் அவர்களை  இறங்கிவிடும்படி கட்டாயப்படுத்துவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து பழனி என்ற பெண் தனது கணவருடன் பம்பை சென்றபோது அவர் போராட்டக்காரர்களால் இறக்கப்பட்டதோடு தாக்கப்பட்டார். இந்த சம்பவம் நடந்தபோது அருகில் போலீசார் இருந்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.