வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Updated : புதன், 15 நவம்பர் 2017 (13:20 IST)

இளம்பெண் பலமுறை பலாத்காரம்: போதை மருந்து கொடுத்து வெறிச்செயல்!

இளம்பெண் பலமுறை பலாத்காரம்: போதை மருந்து கொடுத்து வெறிச்செயல்!

பிரிட்டனில் 22 வயதான இளம்பெண் ஒருவருக்கு போதை மருந்து கொடுத்து அவரை மயக்கி பலமுறை கற்பழித்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.


 
 
பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு அருகில் உள்ள வால்தம்ஸ்டவ் பகுதியை சேர்ந்த 22 வயதான இளம்பெண் தனியாக வசித்து வந்தார். அவர் சில மாதங்களுக்கு முன்னர் இரவு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு தனியாக வீடு திரும்பியுள்ளார். அப்போது அந்த பெண்ணை 33 வயதான டேனியல் என்ற நபர் யாருக்கும் தெரியாமல் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
 
அந்த பெண் தனது வீட்டை அடைந்ததும் அந்த நபரும் வீட்டிற்குள் நுழைந்து அந்த பெண் மீது பாய்ந்து போதை மருந்து கொடுத்து இளம்பெண்ணை மயக்கியுள்ளார். மயங்கிய நிலையில் இருந்த அந்த இளம்பெண்ணை பலமுறை தனது ஆசை தீர பலாத்காரம் செய்துள்ளார் அந்த நபர். பின்னர் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் கிரெடிட் கார்டை கொள்ளையடித்துவிட்டு சென்றுவிட்டார் அந்த நபர்.
 
மறுநாள் காலை எழுந்தபோது அந்த பெண் நிர்வாணமாக இருந்துள்ளார். உடலில் ஆங்காங்கே காயத்துடன் இருந்த பெண் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து அந்த இளம்பெண் நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார். அந்த பெண்ணின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி அந்த நபர் உணவு அருந்தியுள்ளார்.
 
இதனை வைத்து அந்த நபரை ரகசியமாக மடக்கி பிடித்தனர். அதன் பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.