வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 27 அக்டோபர் 2017 (14:35 IST)

ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை: தமிழக அரசின் முயற்சியால் உறுதியாகிறது.

உலகில் உள்ள 1772 மொழிகளில் 7 மொழிகளுக்கு மட்டுமே செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது. இந்த ஏழு மொழிகளில் ஒன்று தமிழ். ஆனால் தமிழ் தவிர மற்ற மொழிகளுக்கு ஹார்வர்டு பல்கலையில் இருக்கை இருக்கும் நிலையில் தமிழ் மொழிக்கு மட்டும் இன்னும் ஹார்வர்ட் பல்கலையில் இருக்கை இல்லை.



 
 
இந்த நிலையில் தமிழ் மொழிக்கு ஹார்வர்டு பல்கலையில் இருக்கை பெற உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இந்த முயற்சியின் பயனாக தற்போது ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது. 
 
ஹார்வர்டு பல்கலையில் இருக்கை பெற மொத்த செலவு சுமார் ரூ.33 கோடி என்ற நிலையில் தனது பங்காக தமிழக அரசு ரூ.9.75 கோடி தர சம்மதம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இன்னும் எவ்வளவு பணம் தேவைப்படுகிறாதோ அந்த பணத்தை பெற அனைத்து முயற்சிகளையும் தமிழக மேற்கொள்ளும் என்று உறுதி கூறப்பட்டுள்ளது. எனவே தமிழர்களின் கனவான ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை கூடியவிரைவில் கிடைக்கவுள்ளது.