செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 27 அக்டோபர் 2017 (14:25 IST)

பாஜக வேடிக்கை பார்க்காது: விசிக கட்சியினர்களுக்கு தமிழிசை எச்சரிக்கை

கடந்த இரண்டு நாட்களாக பாஜக தொண்டர்களுக்கும், விடுதலை சிறுத்தை தொண்டர்களுக்கும் கைகலப்பு உள்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும், பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜனும் ஆக்ரோஷமாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் 'இதேபோன்று வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தால் பாஜக வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது என்று தமிழிசை செளந்தரராஜன் எச்சரித்துள்ளார். விசிகவினருக்கும், பாஜகவினருக்கும் ஏற்பட்ட கைகலப்பு சரியான நடைமுறை அல்ல என்று தெரிவித்த தமிழிசை, ஜனநாயக நாட்டில் கருத்து சொன்னால் எதிர்கருத்து சொல்ல வேண்டும்மே தவிர வன்முறையை கையில் எடுக்க கூடாது என்று தெரிவித்தார்.
 
தமிழிசையின் இந்த கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களிலும் இரு கட்சியின் தொண்டர்கள் கடந்த சில மணி நேரமாக காரசாரமாக விவாதம் செய்து வருகின்றனர்.