1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 14 டிசம்பர் 2023 (20:35 IST)

தும்மலை அடக்கியதால் இளைஞருக்கு விபரீதம்

Cold
ஸ்காட்லாந்து நாட்டில் தும்மலை அடக்கியதால்  இளைஞருக்கு விபரீதம் நிகழ்ந்துள்ளது.

மனிதர்களுக்கு தும்மல் என்பது இயற்கையானது.  ஆனால், சிலர் இதை அடக்க  நினைப்பார்கள். இதை விளையாட்டாகவும் சிலர் அடக்க நினைப்பதுண்டு.

அவர்கள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை தெரிவிக்க்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஸ்காட்லாந்து நாட்டில் காரில் செல்லும்போது, வாயை மூடி தும்மலை அடக்கியதால் 2.மிமீ அளவிற்கு மூச்சுக்குழலில் கிழிசல் ஏற்பட்டு 30 வயதான இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த கிழிசல் அழுத்தம் காரணமாக ஏற்பட்டதாகவும், காயம் தானாகவே குணமாகிவிடும் என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.