வெள்ளி, 7 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 31 ஜனவரி 2025 (09:34 IST)

பூமிக்கு திரும்பாத சுனிதா வில்லியம்ஸ்! விண்வெளியில் படைத்த புதிய சாதனை!

Sunita Williams.

பல்வேறு காரணங்களால் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பூமிக்கு திரும்ப முடியாமல் இருந்து வரும் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் புதிய சாதனையை படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்வெளி ஆய்வு மையத்தில் சில பணிகளுக்காக அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் விண்வெளிக்கு சென்றனர். 9 நாட்களில் திரும்ப வேண்டிய அவர்கள், பல்வேறு தொழில்நுட்ப காரணங்களால் கடந்த 6 மாத காலத்திற்கும் மேலாக விண்வெளியிலேயே இருக்கின்றனர். 

 

விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தபடி அங்குள்ள வேறு சில பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் ரேடியோ தொலைத்தொடர்பு சீரமைப்பு பணிகளுக்காக விண்வெளியில் ஸ்பேஸ்வாக் மேற்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் சுமார் 5 மணி நேரம் 26 நிமிடங்கள் விண்வெளியில் மிதந்துள்ளார். இதுவரை 9 முறை ஸ்பேஸ் வாக் செய்துள்ள சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் 62 மணி நேரம் 6 நிமிடங்கள் ஸ்பேஸ்வாக் செய்துள்ளார். இதன்மூலம் விண்வெளியில் அதிக நேரம் ஸ்பேஸ் வாக் செய்த வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

 

சுனிதா வில்லியம்ஸையும், பட்ச் வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் பொறுப்பை டொனால்டு ட்ரம்ப், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கிடம் ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K