புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 21 ஜூன் 2019 (19:24 IST)

ஸ்ட்ராபெர்ரி நிலவே....பக்கம் வா!!

இரண்டு நாட்களுக்கு வானத்தில் ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் நிலவு தெரியும் என நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி மற்றும் ஜூலை 27 ஆம் தேதிஆகிய இரண்டு நாட்கள் ‘பிளட் மூன்’ எனப்படும் ரத்தசிவப்பு நிலா தோன்றியது.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ‘ஸ்ட்ராபெர்ரி நிலா’ தோன்றும் என்று நாசா அறிவித்துள்ளது.

இது குறித்து நாசா, இரண்டு நாட்களுக்கு ‘ஸ்ட்ராபெர்ரி நிலா’ தோன்றும் எனவும், இதனை ‘ப்ளட் மூனுடன்’ ஒப்பிட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் ’ஸ்ட்ராபெர்ரி நிலவு’ சில இடங்களில் சிகப்பாய் தெரியும் என்றும், சில இடங்களில் நிலவு பிங்க் நிறத்தில் காணப்படும் என்றும் நாசா அறிவித்துள்ளது.

பல இடங்களில் நிலவு உதயமாகும்போதும், மறையும்போதும், ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் தெரிவதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வளிமண்டல நிகழ்வுகளினாலும், பூமியின் அடிவானின் மிக அருகினிலேயே நிலவு நெருங்கி வருவதாலும் ‘ஸ்ட்ராபெர்ரி நிலவு’ தெரிகிறது என நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி நேற்று ‘ஸ்ட்ராபெர்ரி நிலவு’ தோன்றிய நிலையில் இன்றும் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.