Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்ணில் ஏவப்பட்ட எலான் மஸ்க் நிறுவனத்தின் ராக்கெட்.. சில நிமிடங்களில் வெடித்து சிதறியதால் பரபரப்பு..!

Written By Siva
Updated: வெள்ளி, 7 மார்ச் 2025 (08:52 IST)
எலான் மஸ்க் அவர்களுக்கு சொந்தமான ஸ்டார்ஷிப் நிறுவனத்தின் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், அந்த ராக்கெட் சில நிமிடங்களில் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்டார்ஷிப் நிறுவனத்தின் ராக்கெட் ஏவும் காட்சி நேரடி ஒளிபரப்பப்பட்ட நிலையில், ஏவப்பட்ட சில நிமிடங்களில் அதன் முக்கிய இயங்கிகள் செயலிழந்ததால்,   வான் பகுதியில் வெடித்து சிதறியது. இதன் காரணமாக மியாமி உள்ளிட்ட விமான நிலையங்களிலும் தரைவழி போக்குவரத்திலும் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்டார்ஷிப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராக்கெட் திட்டமிடாத பிரிதலை எதிர்கொண்டதாகவும், அதனால் ராக்கெட் மிஷின்களுக்கு இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், இதனால் ராக்கெட் வெடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட் தோல்விக்கான காரணத்தை கண்டுபிடித்து, அடுத்த ராக்கெட்டில் சரி செய்வோம் என்றும், நாம் கற்றுக்கொள்கிற அனைத்திலிருந்தும் வெற்றியை நோக்கிச் செல்வோம் என்றும் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்து சிதறிய காட்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edited by Siva

எல்லாம் காட்டு

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு!.. தமிழர்கள் உட்பட 400 பேர் மாயம்!...

உதயநீதி மீண்டும் கைது செய்யப்படுவாரா?!... மகளிர் ஆணையம் அதிரடி நடவடிக்கை....

பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளுக்கே தர வேண்டும்: பூவுலகின் நண்பர்கள்..

இன்னும் eKYC பதிவு செய்யவில்லையா? ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு..

விஜயே கூப்பிட்டார்!.. சோபா இல்ல.. லாக்கரே வந்தாலும் No!.. பிரேமலதா பேட்டி!..

அடுத்த கட்டுரையில்
Show comments