1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 மே 2022 (11:35 IST)

திவாலானது இலங்கை அரசு...?

இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீர சிங்க தெரிவித்துள்ளார். 

 
இலங்கையில் கடந்த சில மாதங்கள் முன்னதாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் அத்தியாவசிய பொருட்களே கிடைக்காம் அல்லாடும் நிலை ஏற்பட்டது. இதனால் வெகுண்டெழுந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கிய நிலையில் பல அரசியல் பிரமுகர்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
 
பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தப்பித்து தலைமறைவாகியுள்ளார். அதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது எதிர்கட்சியும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக பதவியமர்த்தியுள்ளார்.
 
இந்தநிலையில் இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீர சிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை அரசால் எந்த கடனுக்கான பணத்தையும் திருப்பி செலுத்த முடியவில்லை என கடந்த மாதம் 18 ஆம் தேதி கடனாளர்களுக்கு செலுத்த வேண்டிய 78 மில்லியன் டாலர் பணத்திற்கான கூடுதல் ஒரு மாத அவகாசம் கேட்டது. 
 
இது தற்போது முடிந்துவிட்ட நிலையில், கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பணவீக்கம் 30% இருந்து 40% ஆக அதிகரிக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.