வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : ஞாயிறு, 29 மார்ச் 2020 (11:25 IST)

ஸ்பெயின் இளவரசி கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார் .

ஸ்பெயின் இளவரசி கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளில் பரவியிருக்கும் கொடூரமான கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதுவரை உலக அளவில் 664103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,30883 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா(86) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தார் . பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிகிச்சை பெற்றுவந்த 86 வயது இளவரசி மரியா தெரசா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 832 பேர் உயிரிழந்துள்ளனர்.தேசிய அளவில் சுமார் 5690 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்தியாவிலும் 21 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.