ஆக்சிஜன் இன்றி எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த ஸ்பெயின் வீரர்!!
மலை ஏறும் வீரர் ஒருவர் கயிறு, ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற முக்கிய உபகரனங்கள் ஏதுமின்றி எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படத்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மலை ஏறும் வீரர் இலியன் ஜோர்னெட். இவர், 26 மணி நேரத்தில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார்.
சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள திபெத் பகுதியில் இருந்து எவரெஸ்ட் சிகரம் மீது ஏறினார். கயிறு மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி ஏறினார்.
இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் அதிவேகமாக ஏறிய வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார்.