திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 அக்டோபர் 2021 (11:31 IST)

மனசோர்வா.. அழ இடமில்லையா? இங்க வந்து அழுங்க! – ஸ்பெயினில் அழுவதற்கு அறை!

மனசோர்வு நோய் மக்களிடையே அதிகரித்து வரும் நிலையில் அழுவதற்காக தனியாக ஸ்பெயினில் அறைகள் கட்டப்பட்டுள்ள சம்பவம் வைரலாகியுள்ளது.

உலகம் முழுவதும் மக்களிடையே மனசோர்வு மற்றும் மனரீதியான அழுத்தங்கள் பெரும் பிரச்சினையாக மாறி வருகின்றன. அதீத வேலைப்பளு, வீட்டு பிரச்சினைகள் என நாள்தோறும் பல பிரச்சினைகளை மனதில் வைத்து குழம்புவதால் மக்களுக்கு மனசோர்வு அதிகரிப்பதாக மனதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் மனசோர்வை குறைக்க ஸ்பெயின் புதிய முறையை கையாள தொடங்கியுள்ளது. மனசோர்வு குறைய மனது விட்டு அழுதல் அல்லது கவலைகளை பிறரிடம் பகிர்தல் ஆகியவை அவசியம் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்பெயினில் மாட்ரிட் நகரின் பல வீதிகளில் அழுவதற்காக சிறப்பு அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.