வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 ஜனவரி 2021 (08:41 IST)

தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளி தாதா கொலை! – கொன்றவர்களுக்கு மக்கள் கொடுத்த தண்டனை!

தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி நிழலுலக தாதாவை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் போதை பொருள் கடத்தல், ஆயுத விற்பனை என நிழலுலக தாதாவாக வலம் வந்தவர் இந்திய வம்சாவளியான யகநாதன் பிள்ளை. பல சட்டவிரோத நடவடிக்கைகளால் இவர் மீது பல எதிரிகளுக்கு நோட்டம் இருந்த நிலையில் அவரது பகுதி மக்களுக்கு உதவிகள் செய்து அவர்களுக்கு மட்டும் நல்லவராக இருந்து வந்துள்ளார் யகநாதன் பிள்ளை.

இந்நிலையில் யகநாதன் பிள்ளை தன் வீட்டில் மகளோடு இருந்தபோது உள்ளே புகுந்த மர்ம நபர்கள் யகநாதன் பிள்ளையை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்றனர். இதனால் சம்பவ இடத்திலேயே யகநாதன் பிள்ளை உயிரிழந்தார். தப்பியோடிய மர்ம நபர்களை விரட்டி பிடித்த அப்பகுதி மக்கள் அந்த மர்ம ஆசாமிகளை அடித்தே கொன்றதோடு, அவர்களது தலையை வெட்டி அந்த பகுதியின் எல்லையிலும் தொங்க விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த இந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.