1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2016 (11:44 IST)

லேசர்ருக்கும் ஜெல்லி மீன்களுக்கும் உள்ள தொடர்பு என்ன???

லேசர்களுக்கும் ஜெல்லி மீன்களுக்கும் ஒர் தொடர்பை ஏற்படுத்தி உள்ளது ஸ்காட்லாந்தின் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் ஆராய்ச்சி.


 
 
ஸ்காட்லாந்தின் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒளிரும் ஜெல்லி மீன் புரதங்கள் அடிப்படையில் உலகின் முதல் போலரேஷன் லேசர் செயல் விளக்கம் நிகழ்த்தியுள்ளனர். இவ்வகை லேசர்கள் மூலம் ஆப்டிகல் கம்ப்யூட்டிங் போன்ற துறைகளில் முக்கிய முன்னேற்றங்களை தூண்ட முடியும் எனவும் கண்டு பிடித்துள்ளனார்.
 
போலரேஷன் லேசர்கள் வழக்கமான லேசர்களில் இருந்து தங்கள் இயற்பியலில் வேறுபட்டு குறைந்த ஆற்றல் மட்டங்களில் ஒளி உருவாக்கும் முக்கியமான திறமையை கொண்டிருக்கும். 
 
போலரேஷன் லேசர்கள் மிக மிக குறைந்த வெப்பநிலையில் இயக்கப்பட வேண்டிய ஒன்று. ஆதாவது நைட்ரஜன் வாயு திரவமாக ஆகும் வெப்பநிலை. ஆனால் அவ்வாறு வெப்பநிலை இல்லாத பகுதிகளிலும் புதிய ஜெல்லி மீன் புரதம் சார்ந்த போலரேஷன் லேசர்கள் உதவ இருக்கிறது. அதாவது அறை வெப்பநிலையில் கூட அவ்வகை லேசர்கள் இயக்கப்பட உதவும்.