வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 18 ஜூலை 2017 (19:33 IST)

விண்வெளியில் ஒருவர் இறந்து போனால் அவரது உடல் என்னவாகும்? மில்லியன் டாலர் கேள்விக்கான விடை!!

விண்வெளிக்கு பயணிக்கும் ஒரு வீரர் விண்வெளியிலேயே இறந்து போனால் அந்த உடல் என்னவாகும் என்பது சிலர் மனதில் தோன்றும் கேள்விதான். அந்த கேள்விக்கான பதிலை தெரிந்துகொள்ளுங்கள்.


 
 
விண்வெளி செல்லும் வீரர்களின் பெரும்பாலான இறப்பு ராக்கெட் ஏவும் போதும், விண்கலம் தரை இறங்கும் போதும் அல்லது இதற்கு இடைப்பட்ட பயணத்தில் விபத்து ஏற்பட்டு நிகழ்ந்துள்ளது.  
 
இதை தவிர்த்து ஒருவரது மரணம் விண்வெளியில் இருக்கும் போது நிகழ்ந்தால் நான்கு முக்கிய சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
 
1) இறந்தவரின் சடலத்தை விண்கல லாக்கரில் வைக்க இயலாது. 
 
2) விண்வெளியில் கல்லறை ஒன்றை வடிவமைப்பது அசாத்திய திட்டமாகும். 
 
3) இறந்தவரை பூமிக்கு கொண்டு வருவதற்குள் அவரது உடல் பாதிக்கும் மேல் அழுகிவிடும். 
 
4) இறந்தவரின் உடலை தூக்கி எறியவும் முடியாது. ஏனெனில் புவி ஈர்ப்பு தன்மை இல்லாததால் அந்த உடல் விண்வெளியிலேயே சுற்றி திரியும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது.
 
எனவே, இந்த சிக்கல்களை தவிர்க்கவே இதற்கு ஒரு மாற்று வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாடி பேக் (Body Back) என்னும் திட்டம் சிறந்த தீர்வாகவுள்ளது.
 
விண்வெளியில் இறந்தவர் உடலை பாடி பேக் என்னும் பையில் போட்டு உறைய வைத்து, அந்த உடல் பவுடராகும் வரை வைப்ரேட் செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் மேல் கூறப்பட்ட சிக்கல்கள் தவிர்க்கப்படும் என நாசா கண்டறிந்துள்ளது.