ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 9 மே 2019 (09:39 IST)

காலிங் பெல் அடித்த நபர்; பாய்ந்து வந்து கொத்திய பாம்பு: பரவும் திடுக் வீடியோ!!

வீட்டின் காலிங் பெல்லை அடித்த நபர் ஒருவரை ஆத்திரத்தோடு பாம்பு ஒன்று கொத்திய திடுக் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
அமெரிக்காவில் நண்பர் ஒருவரின் வீட்டுற்கு சென்ர நபருக்குதான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நாளன்று நண்பரின் வீட்டிற்கு பயணித்த அந்த நபர். வாசல் அருகே வந்து காலிங் பெல் அடித்துள்ளார். 
 
அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று ஆத்திரத்துடன் பாய்ந்து வந்து அவரை தாக்குகிறது. உடனடியாக அந்த நபர் தன்னை மருத்துவனை அழைத்து செல்லும் படி வீட்டில் இருப்பவர்களிடம் கூச்சலிட்டுக்கொண்டே செல்கிறார்.
 
இதுதான் நடந்த சம்பவம், இது வீடியோவாக சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நலமாக உள்ளதாகவும் அந்த பாம்பு அடித்து கொல்லப்பட்டதாகவும் அது விஷமற்றது எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதோ அந்த வீடியோ...