டிரம்ப் vs கிம்: யார் ஏமாளி? வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!!
வடகொரியா அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னரும் மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது.
ஆம், ஐநா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை மீறி, உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணைகள் சோதனையை தொடங்கி உள்ளது.
வடகொரிய பல ஏவுகணை சோதனைகளை நடத்திய நிலையில் அமெரிக்கா அதனை கடுமையாக எதிர்த்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவு வந்தது. இதன பின்னர் சற்றும் எதிர்பாராத வகையில் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்து, இரண்டு முறை பேச்சுவார்த்தை நடந்தது.
ஆனால், இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் இருநாடுகளுக்கும் எந்த நற்பயனும் கிடைத்ததாக தெரியவில்லை. ஆனால், வடகொரியா கடந்த சில மாதங்களாக எந்த ஒரு சோதனையும் மேற்கொள்ளாமல் அமைதியாகவே இருந்தது.
இந்நிலையில் இன்று வடகொரியாவில் உள்ள கிழக்கு கடலோர நகரமான வோன்சான் அருகே அமைந்துள்ள ஹோடோ தீபகற்ப பகுதியில் இருந்து குறைந்த இலக்கில் சென்று தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற பல ஏவுகணைகளை வடகொரியா சோதித்து பார்த்துள்ளது.
வட கொரியா ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் கிழக்கு கடலை நோக்கி 70 முதல் 200 கிமீ தொலைவுக்கு பாய்ந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.