புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 30 செப்டம்பர் 2017 (14:57 IST)

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு மலையாளிகள் பங்களிப்பு; பிரதமர் புகழாரம்

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு இங்குள்ள கேரளாவைச் சேர்ந்தவர்கள் மகத்தான பங்களிப்பு அளித்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் லீ சியென் லூங் புகழாரம் சூட்டியுள்ளார்.


 

 
சிங்கப்பூரில் இயங்கிவரும் மலையாளிகள் சங்கத்தின் நூற்றாண்டு விழா விருந்தில் நேற்றிரவு பிரதமர் லீ சியென் லூங் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
 
உலகின் பல நாடுகளில் தீவிரவாதம், மதவாதம் மற்றும் நிறவெறி மேலோங்கிவரும் நிலையில் இதுபோன்ற வியாதிகளால் சிங்கப்பூர் இன்னும் பாதிக்கப்படவில்லை. வேறுபாடுகளை வலிமையாக மாற்றுவது எப்படி? என்பதை இங்குள்ள கேரளாவைச் சேர்ந்த மலையாள சமூகத்தினர் நமக்கு காட்டியுள்ளனர். எண்ணைக்கையில் சிறிதாக இருந்தாலும் நாட்டின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை அளித்துள்ளனர் என்றார்.
 
சிங்கப்பூரில் தற்போது சுமார் 26 ஆயிரம் மலையாளிகள் வாழ்ந்து வருகின்றனர். சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் தற்போது மூன்று பேர் எம்.பி.க்களாக உள்ளனர். மேலும், பிரதமர் கேரளாவை சேர்ந்தவர்களை மிகவும் மகிழ்ச்சியோடு பாரட்டிய சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.