செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (14:45 IST)

ஜப்பானின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா தேர்வு.!

Japan PM
ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக எல்டிபி கட்சியின் ஷிகெரு இஷிபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  
 
2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதியன்று ஜப்பானியப் பிரதமராக  கிஷிடா பதவி ஏற்றார். அவரது பதவி காலத்தில் விலைவாசி உயர்வு, அரசியல் சர்ச்சைகள் ஆகியவற்றால் ஜப்பான் மக்கள் பாதிக்கப்பட்டனர்.  இதனால் மக்கள் மத்தியில்  கிஷிடாவுக்கு இருந்த ஆதரவு குறைந்தது. மேலும் மோசடி புகார் அவர் மீது எழுந்தது. 
 
நாட்டின் தலைவர் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாவிடில் சுமுகமான, சிறந்த முறையில் ஆட்சி செய்ய முடியாது என்றும்  அரசியல் சீர்திருத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பதவி விலக தீர்மானித்துள்ளேன் என்றும்  கிஷிடா தெரிவித்தார். அதன்படி, ஃபியூமோ கிஷிடா தனது பதவியை ராஜினாமா செய்ததால் ஜப்பானில் பிரதமர் தேர்தல் நடைபெற்றது. உட்கட்சித் தேர்தலில் 9 பேர் போட்டியிட்ட நிலையில் அதில் 3-பேர் இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகினர். 

 
ஜப்பானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான ஷிகெரு இஷிபா பிரதமராக தேர்வாகியுள்ளார். ஆளுங்கட்சியின் 368 உறுப்பினர்களும், கட்சியின் அடித்தள உறுப்பினர்களும் ஷிகெரு இஷிபாவை தேர்வு செய்தனர்.