செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2024 (09:53 IST)

அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு கடல் வழி பயணத்தை நெப்போலியன் குடும்பத்தினர் தொடங்கினர்!

நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக  இருக்கிறார்.
 
ஆரம்பத்தில் வில்லனாக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் அதற்குப் பிறகு கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருந்தார். அதோடு அரசியலிலும் ஈடுபட்டு எம்எல்ஏவாகவும், மத்திய மந்திரியாகவும் பதவி வகித்த நெப்போலியன் தற்போது தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
 
கடந்த மாதத்தில் தன்னுடைய மூத்த மகன் தனுஷின் எங்கேஜ்மெண்டை முடித்து இருக்கிறார். வரும் நவம்பர் மாதத்தில் தன்னுடைய மகனின் திருமணம் நடைபெற இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
 
தன்னுடைய மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் வீடியோ கால் மூலமாகவே தமிழ்நாட்டில் அதுவும் திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைபட்டியை சார்ந்த அக்ஷயா என்ற பெண்ணோடு நிச்சயதார்த்தத்தை முடித்து இருந்தார்.
 
அதுபோல தன்னுடைய மகன் திருமணம் ஜப்பானில் நடைபெறுவதாகவும் அறிவித்திருக்கிறார். அதிலும் அடுத்த மாதம் தன்னுடைய மகனின் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு கிளம்புவதாக அறிவித்திருக்கிறார்.
 
 "அன்பு நண்பர்களே தமிழ் சொந்தங்களே செப்டம்பர் 1 அன்று அமெரிக்காவில் நாங்கள் வசிக்கும் Nashville- லில் இருந்து எனது குடும்பத்தோடு ஜப்பானுக்கு பயணம் தொடங்கிய போது நண்பர்கள் எல்லோரும் வந்து இருந்து சிறப்பாக வாழ்த்துக்களை அளித்து எங்களை பாசத்தோடு வழியனுப்பி வைத்த மகிழ்வான தருணம். எங்கள் வாழ்வில் ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி.. அனைவருக்கும் நன்றி" என்று அந்த பதிவில் நெப்போலியன் கூறியிருக்கிறார்.
 
அதாவது நெப்போலியனின் மகன் தனுஷால் விமானத்தில் பயணம் செய்ய முடியாது என்பதால் கப்பல் வழியாகவே அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு பயணம் செய்வதாக ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இப்போது திருமணத்திற்கு ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் பல நாட்கள் பயணித்து தான் அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு செல்ல முடியும் என்பதால் கடல் வழியாக செல்லும் பயணத்தை நெப்போலியன் குடும்பத்தினர் தொடங்கி இருக்கிறார்கள்.