புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (11:26 IST)

ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட் ரத்து: வங்கதேச இடைக்கால அரசு அதிரடி நடவடிக்கை..!

Hasina
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட் ரத்து செய்வதாக வங்கதேச இடைக்கால அரசு அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் மாணவர்கள் இட ஒதுக்கீடு உத்தரவை எதிர்த்து செய்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் விரைவில் இங்கிலாந்துக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, ஷேக் ஹசீனாவின் அனைத்து நாடுகளின் பாஸ்போர்ட்களை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதுமட்டுமின்றி முன்னாள் எம்பிக்கள் அனைவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருக்கும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வேறு நாட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran