Daily Horoscope

பள்ளிக் கூடத்தில் தீ விபத்து... 28 மாணவர்கள் பலி ...பதறவைக்கும் சம்பவம்

Written By sinojkiyan
Updated: புதன், 18 செப்டம்பர் 2019 (21:37 IST)
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியா தலைநகர் மொன்ரோவியாவில் உள்ள ஒரு  பள்ளியில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய 28 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் பரிதாபமால பலியாகினர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியா தலைநகர் மொன்ரோவியாவில்  உள்ள ஒரு இஸ்லாமிய பள்ளியில் இன்று திடீரென்று தீ பிடித்து அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியது. இதனால் பள்ளியில் படித்துவந்த 28  மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் இந்த தீயில் சிக்கி உயிரிழந்தனர்.
 
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த, தீயணைப்புத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து, காயமடைந்த மாணவர்களையும்,ஆசிரியர்களையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த எதிர்பாராத விபத்திற்கு அந்த நாட்டு அதிபர் ஜார்ஜ் வே தனது ஆழ்ந்த இரங்கலை கூறியுள்ளார். இந்த விபத்து அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments