திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 29 ஏப்ரல் 2017 (05:41 IST)

இந்திய மணல் சிற்ப கலைஞருக்கு ரஷ்யா கொடுத்த தங்கப்பதக்கம்

பிரபல இந்திய மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அவர்களுக்கு மாஸ்கோவில் நடந்த உலக மணல் சிற்ப கலைஞர்களின் போட்டியில் முதல் பரிசு கிடைத்துள்ளது.



 


ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் மணல் சிற்ப கலை போட்டியை ரஷ்யா நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 22 முதல் 28 வரை ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடந்தது.

இதில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட சுதர்சன் பட்நாயக், விநாயகரின் சிலையை மணலில் உருவாக்கியிருந்தார். இந்த மணல் சிற்பம் முதல் பரிசான தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. சுதர்சனுக்கு ரஷ்யாவில் உள்ள இந்திய தூதர் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த வருடமும் மகாத்மா காந்தியை மணலில் வரைந்து சுதர்சன் இதே போட்டியில் பரிசை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.