திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 31 மே 2018 (17:43 IST)

கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்? உயிருடன் வந்த விநோதம்!

ரஷ்யாவை சேர்ந்த பத்திரிகையாளரான அர்காடி பாப்சென்கோ ரஷ்ய அரசையும், அதிபர் புதின்னையும் கடுமையாக விமர்சித்தவர். குறிப்பாக சிரியா மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிர்த்து குரல் கொடுத்தவர். 
 
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட பதிவு ஒன்றால் இவருக்கு கொலை மிரட்டல் வந்தது. இதனால், இவர் ரஷ்யாவை விட்டு கடந்த ஆண்டு தப்பிச்சென்றார். 
 
இந்நிலையில், கடந்த வாரம் இவர் கொல்லப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகின. அனால், இந்த செய்தி வெறும் வதந்தி என்று, உக்ரைன் அரசு பத்திரிக்கையாளைன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
அதில் அந்த பத்திரிக்கையாளர் பின்வருமாறு கூறியுள்ளார். என்னை கொலை செய்ய திட்டமிடப்பட்டிருப்பது ஒரு மாதத்துக்கு முன்பாகவே தெரியும். எனது உயிரை காப்பாற்றியதற்காக உக்ரைன் பாதுகாப்புப் பிரிவினருக்கு நன்றி என தெரிவித்துள்ளார். 
 
இந்த பத்திரியாளரை கொல்ல, ரஷ்யா உக்ரைன் குடிமகன் ஒருவரை நியமித்து, அவருக்கு சுமார் 30 ஆயிரம் டாலர் வரை தருவதாக ரஷ்யா கூறியிருந்தது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.