செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 மார்ச் 2022 (07:44 IST)

பற்றி எரியும் உக்ரைன் அணுமின் நிலையம்: மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என அச்சம்!

பற்றி எரியும் உக்ரைன் அணுமின் நிலையம்: மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என அச்சம்!
உக்ரைனில் உள்ள அணுமின் நிலையம் ரஷ்ய தாக்குதல் காரணமாக பற்றி எரிந்து கொண்டிருப்பதால் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த ஒரு வாரமாக உக்ரைன் மீது ரஷ்யா ராணுவப்படை தாக்கி வருகிறது என்பதும் உக்ரைன் நாட்டின் சில நகரங்கள் ரஷ்ய ராணுவ படையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை ரஷ்ய ராணுவம் தாக்கியுள்ளதாகவும், அந்த அணுமின் நிலையம் தீப்பற்றி எரிவது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்த அணுமின் நிலையம் வெடித்தால் செர்னோபில் விபத்தை விட 10 மடங்கு அதிக பாதிப்பு ஏற்படும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்