வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 17 ஜூன் 2019 (13:30 IST)

சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம் : மொத்த நீரையும் குடித்த ’வாய் பிளந்த பள்ளம்’!

இங்கிலாந்தில் தற்போது உலக கோப்பை கிரிக்கெட்  தொடர் நடைபெற்று வருகிறது. ஆனால் ரசிகர்களை ஏமாற்றும் விதமாக அவ்வப்போது போட்டியின் குறுக்கே மழைபெய்து ரசிர்களை ஏமாற்றியது. நேற்றைய பாகிஸ்தான் - இந்தியா ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டது. ஆனால் இந்தியாவின் அசத்தலான பேட்டிங் மற்றும் பந்துவீச்சல் இந்திய அணி மெகா வெற்றி பெற்றது.
இந்நிலையில் இங்கிலாந்தில் சில தினங்களாகப் பெய்யும் மழை காரணமாக மொத்த நீரும் திரண்டு சாலையில் திடீரென்று ஒரு பள்ளமாகத் தோன்றியது.
 
இங்கிலாந்து நாட்டில் நார்த்வெல்ஸ் என்ற இடத்தில் சில தினங்களாக பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் அங்கு தோன்றிய திடீர் பள்ளம் ஒன்று மொத்த வெள்ளத்தின் நீரையும்  உறிஞ்சிக் குடித்தது. இதை யாரோ ஒருவர் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிய தற்போது வைரலாகிவருகிறது.