Last Modified: வியாழன், 29 செப்டம்பர் 2016 (19:56 IST)
’பாராட்டுக் குவியல்’ - டென்னிஸ் வீரரின் நல்ல உள்ளம்! - வீடியோ!
ஸ்பெயின் நாட்டின் முன்னணி டென்னிஸ் வீரர் ரபெல் நடால்.
இந்நிலையில், இவர், பங்கேற்ற டென்னிஸ் ஆட்டத்தை, ஏழாயிரம் பேர் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ரசிகர்களின் கூட்டத்திற்குள் சலசலப்பு ஏற்பட்டது. பெண்மணி ஒருவர் தனது குழந்தையை தொலைத்து விட்டு பதறிக்கொண்டிருந்தார். ரசிகர்கள் அமர்ந்திருக்கும் கேலரியில் அழுதபடியே குழந்தையை அங்கும்இங்குமாக தேடிக் கொண்டிருந்தார். தற்செயலாக நடால் இந்த சம்பவத்தை கவனித்தார். உடனே, நடால் தனது ஆட்டத்தை நிறுத்தினார்.
பின்னர், அந்த பெண்மணியின் மீது அனைவருடைய பார்வையும் பட்டது. இதனால் அந்த பெண்மணி உடனடியாக தனது குழந்தையை கண்டுபிடித்தார். குழந்தையை கண்டுபிடித்த சந்தோசத்தில் பெண்மணி அவரை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விட்டு, கூட்டத்திற்குள் நுழைந்து வெளியேறினார். அத்துடன் நன்றி உணர்ச்சியுடன் நடாலை நோக்கி கைகாட்டி தனது நன்றியை தெரிவித்தார்.
இந்த காட்சி இணையதளத்தில் வெளியானது. பின் நடாலுக்கு பாராட்டுகள் குவியத் தொடங்கிவிட்டது.